கிளிநொச்சியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் குளிர் மற்றும் மழை காரணமாக 40 மாடுகளும் 3 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.
இச்சம்பவம் இன்று (9.12.2022) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னகர் பிரதேசத்தில் உள்ள சிவராசா சிவகாந்தனின் தோட்டத்திலுள்ள கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் குறித்த பண்ணையில் மேலும் சில கால்நடைகள் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே கால்நடைகளை காப்பாற்ற அப்பகுதி மக்கள் தீ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கிராம சேவை ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் கடும் குளிருடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post கிளிநொச்சியில் கடும் குளிரால் கால்நடைகள் உயிரிழப்பு ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
