கொவிட் தொற்றாளரின் வீட்டிற்கு சென்ற PHI மீது தாக்குதல் நடத்தி எச்சில் துப்பிய நபர் கைது!

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவரின் வீட்டிற்கு பணி நிமித்தமாக சென்ற பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தி உமிழந்த சம்வத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிஉல்ல – புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்தஇ பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது உமிழ்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply