யாழ். கோண்டாவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு குடிநீர் வசதி!

யாழ். கோண்டாவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு, ரூபா 81,000 செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் பணிப்பாளருமான சரவணையூர் விசு.செல்வராசாவின் நெறிப்படுத்தலில், அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளால் பாடசாலைக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

42 மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு அறக்கட்டளையால் இன்று தீர்வு பெற்று கொடுக்கப்பட்டது.

அத்துடன், அறக்கட்டளையால் மாணவர்களுக்கு மதிய போசனமும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் க.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான, செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம், தலைவர் நா.தனேந்திரன், இணைப்பாளர் யோசேப், கல்விப்பிரிவு பொறுப்பாளர் அதிபர் க.சசிகரன், பொருளாளர் கீர்த்தனா, உப செயலாளர் இ.சற்குருநாதன், உப தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஆலோசகர் இ.மயில்வாகனம், நிர்வாக சபை உறுப்பினர்களான, வினோத் மற்றும் விது ஆகியோர் கலந்துகொண்டு, குடிநீர்த் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததோடு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் மதிய போசனத்தையும் வழங்கி வைத்தனர்.

Leave a Reply