கொத்தலாவல சட்டமூலம் மீதான விவாதம் வெள்ளியன்று இல்லை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை நாளை (05) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அந்த சட்டமூலத்தை நாளைய தினத்தில் விவாதத்திற்கு எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த நிலையில் இது குறித்து இன்று(04) பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, இந்த சட்டமூலம் தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றார்.

எனவே, சட்டமூலம் மீதான விவாதத்தை பிரிதொரு தினத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

Leave a Reply