கொழும்புக்குள் வாகனப் பேரணியாக நுழைய ஆசிரியர்கள் திட்டம்

கொழும்பு நோக்கி வாகனப் பேரணி போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலிறுத்தி அதிபர், ஆசிரியர்களினால் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நேற்று (04) நடத்தப்பட்ட கலந்துரையாடலிலும் தீர்வு கிடைக்கவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

மொரட்டுவ, கொட்டாவை, வெலிசர மற்றும் கடவத்த ஆகிய 4 வீதிகளின் ஊடாக கொழும்பு நகருக்குள் வாகனப் பேரணிகள் நுழையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply