முன்னிலை சோஷலிச கட்சியின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் நேற்று (04) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னிலை சோஷலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களினால், இராஜகிரியவில் இருந்து பாராளுமன்றம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பொலிஸார் வீதித் தடைகளை போட்டு தடுத்து நிறுத்தினர். அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது, மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.