சென்னையில் கோர தாண்டவமாடி கரையை கடந்தது மாண்டஸ் புயல்!

மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த புயலால் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்ந்து வட உள் மாவட்டங்கள் வழியாக நகர்ந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் 70 முதல் 75 கி.மீ வேகம் வரை பதிவாகி உள்ளது. இந்த புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது. புழல் 10 செ.மீ, பூந்தமல்லி 10 செ.மீ, நுங்கம்பாக்கம் 10 செ.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் 7 செ.மீ, வில்லிவாக்கம் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

புயலால் சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து பேரிடர் மற்றும் பிற குழுக்கள் அனுப்பப்படவுள்ளதுடன் தொடர்ந்து வட உள்தமிழக மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியதால், பராமரிப்பு பணி காரணமாக விமான ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் 4 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *