அம்பாறையில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மோதி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த நபர் நுவரெலியா சாந்தி புர பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பி.ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று பகல் வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி பெரேரா மீது குறித்து பேருந்து மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி நுவரெலியா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.