கந்தளாய் பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு இரண்டாம் குலனி வீதியை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில்  ஈடுபட்டார்கள்.

இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று(9) மாலை இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பேராறு வீதிகளை புனரமைத்து தருமாறு கோசங்களை எழுப்பினர்.

கொட்டும் மழை என்றும் பாராமல் தமது எதிர்பினை வெளிக்காட்டினார்கள்.

இதன் போது பேராறு வீதிகளை விரைவில் புனரமைத்து தா!,

அரசாங்கமே கண் திறந்து பார்! வீதியை புனரமைத்து தா!

பேராறு வீதிகளுக்கு எப்போது விடிவு கிட்டும்.

அரசே! இனியாவது பேராறு வீதிகளை அபிவிருத்தி திட்டங்களில் உள்வாங்கு!

1958 ஆம் ஆண்டுகலிருந்து இற்றை வரை புனரமைக்கப்படாத பேராறு வீதிகளை புனரமைத்து தா!?.

பேராறு வீதிகளுக்கு ஏன் இந்த அவல நிலை எப்போது விடிவு கிட்டும்.

கந்தளாய் பேராறு வீதிகளை விரைவில் புனரமைத்து தாருங்கள்!

60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத பேராறு வீதிகள்!

பாராளுமன்ற உறுப்பினர்களே!வாக்குகளுக்கு மட்டுமா மக்கள், வீதியை புனரமைத்து தாருங்கள்.

வீதிகளில் வைத்தியசாலைகளுக்கு கூட செல்ல முடியாத அவல நிலை!

குளம் போல் காட்சியளிக்கும் வீதிகள்!

எப்போது மக்களின் போக்குவரத்து பிரச்சினை தீரும்!

போன்ற வாசகங்களையும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *