இராமேஸ்வரம் வேதாளை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கோடி ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகள் தமிழ்நாடு மரைன் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் அல்லாபிச்சை என்பவரது தோப்பில்இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அல்லாபிச்சை என்பவர் தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
குற்றவாளிகள் யாரும் இல்லாததால் கடல் அட்டையை மட்டும் கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டையின் சர்வதேச மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.