இன்றைய சபை அமர்வுகளில் கலந்துகொள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளதாக உறுதியளித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று சபாநாயகரை சந்தித்து நிலைமை குறித்து கலந்துரையாடியதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சம்பவங்களை அடுத்து நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க எதிரணியினர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply