திருகோணமலை மாவட்டம் இதம் பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக,மற்றும் பலத்த தொடர் அடை மழை காரணமாகவும் நெற் செய்கை விவசாயம் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெற் பயிருக்காக விளைச்சல் மேற்கொண்டு ஒரு மாதம் கடந்த நிலையில் மழை வெள்ளத்தில் தற்போது மூழ்கியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறித்த விவசாய நிலமானது சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் செய்கை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு போதுமான விளைச்சல் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பெரும் நஷ்டவாளியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே தங்களுக்கு இதற்கான நஷ்ட ஈட்டினையும் போதிய யூரியா உரத்தினையும் மானிய அடிப்பகையில் வழங்குமாறும் சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.