வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (04) காலை குறித்த பகுதியில் சடலமொன்று இருப்பதை அவதானித்த பொதுமக்கள், இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டதுடன், இது தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply