சீதையம்மன் ஆலயம் புனித பூமியாக பிரகடனம்!!

நுவரெலியா (சீத்தா எலியா) சீதை அம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்று நுவரெலியா பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நுவரெலியா பிரதேச சபையில் இம்மாதத்திற்கான மாதாந்த கூட்டம் நேற்றைய முன் தினம் வியாழக்கிழமை பிற்பகல் நுவரெலியா பிரதேச சபையில் தவிசாளர் வேலு.யோகராஜா தலைமையில் நானுஓயாவில் உள்ள பிரதேச சபை காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  21 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மற்றும் இரண்டு உறுப்பினர்கள் சமூக மதிக்கவில்லை.

 இக்கூட்டத்தில் நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சரித்திர முக்கியத்துவம் பெற்ற சீதை அம்மன் ஆலயத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த தீர்மானம் ஒன்றை தவிசாளர் வேலு.யோகராஜா முன் வைத்துள்ளார்.

இந்த தீர்மானத்தை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.ராமஜெயம் வழிமொழிந்தார்.

குறித்த தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்மானம் தொடர்பாக தவிசாளர் வேலு.யோகராஜா கருத்து தெரிவிக்கையில் நுவரெலியா வெளிமடை வீதியில் நுவரெலியா நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு பெருந்திரளான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சீதை அம்மன் பக்தர்களும் தின வருகை தருகின்றனர்.

இந்த ஆலயத்தின் புனிதத்தை பாதுகாப்பதற்காக ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

இந்த தீர்மானத்தை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிடம் சமர்ப்பித்து, அவர் மூலம் ஜனாதிபதிற்கும் மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *