இயக்குநர் விமல் ராஜின் இயக்கத்தில் ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் சர்வதேச விருதுகள் பெற்ற ‘எழில்’ மற்றும் ‘சுகந்தி’ ஆகிய இரு குறுந்திரைப்படங்கள் யாழில் திரையிடப்படவுள்ளன.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விமல் ராஜின் இயக்கத்தில் ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் எழில் மற்றும் சுகந்தி குறுந்திரைப்படங்கள் எதிர்வரும் 15.12.2022 வியாழக் கிழமை மாலை 4:30 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
இந்நிலையில் எழில் குறுந்திரைப்படமானது இதுவரை 12 சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு ஆறு விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற விருதுகள்
Gona Film Awards-2021 – Special Jury Award [Best Director] Kodambakkam
Tagore International Film Festival – 2021 : Outstanding Achievement Award – Bolpur,West Bengal
Uruvatti International Film Festival – 2021 : Special Mention Award – Tamil Nadu
Havelock International Film Festival – 2021 : Special Jury Award [Best Short Script/Screenplay] India
Golden Sparrow International Film Festival – 2020 : Critics Choice Award – Tamil Nadu,
Indo French International Film Festival – 2020 : Audience Choice Award – Pondicherry