ஆர்ப்பாட்டத்தில் இரு விரல்கள் சேதமடைந்த பொலிஸ் அதிகாரி!

பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதனை தடுத்து நிறுத்த முயற்சித்த மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் கட்டளையை மீறி ஆர்ப்பாட்டதாரர்கள் முன்னோக்கி நகர்ந்த போது வீதித் தடைகள் போடப்பட்டிருந்தன. அவற்றை தகர்த்துத் தள்ளி முன்னோக்கி செல்ல முயற்சித்தனர்.

Advertisement

இந் நிலையில் மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் இரு விரல்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply