வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் தாய் சங்க கிளையின் புதிய நிர்வாகம் தெரிவு!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுகூட்டமும் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான  பிரியாவிடை நிகழ்வும் இன்று காலை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் கலாநிதி பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

வட்டுக்கோட்டை தென்னிந் திருச்சபையின் பேராலயத்தில் ஆராதனையோடு ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில்  கல்லூரியில் 25வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களான என்.வி ஜெயக்குமார், ரி.கணேசமூர்த்தி ஆகியோருக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் மதிப்பளிப்பு செய்யப்பட்டு பிரியாவிடை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக கல்லூரியின் பழைய மாணவர் தாய் சங்க கிளையின் நிர்வாகம் புதிதாக தெரிவு செய்யப்பட்டது.
இதன்போது தலைவராக கலாநிதி பிரசாந்தன், செயலாளராக கலாநிதி திருவரங்கன், பொருளாளராக சதீஷ் உம் தெரிவு செய்பட்டதோடு தொடர்ச்சியாக உப தலைவர்களும் நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
தொடர்ச்சியாக கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் செய்யப்பட்ட ருஷிரா குலசிங்கத்தால் விசேட உரையும் இடம்பெற்றது. எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 200வது ஆண்டு விழ்வை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *