யாழ். மாநகர எல்லைக்குள் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த கோரி மாநகர முதல்வரிடம் மகஜர்

யாழ். மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட உணவகங்களில் லன்ச்சீட், பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணணிடம் அறம் அமைப்பினர் மகஜர் ஒன்றினை நேற்றைய தினம் (03) கையளித்திருந்தனர்.

யாழ். மாவட்ட சமயத் தலைவர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், யாழ். பல்கலைக்கழக சமூகத்தினர், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்ட (500 பேர்) மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து கோவை மற்றும் குறித்த விடயம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் மாநகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த சந்திப்பின் போது இத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவதிலிருக்கும் சவால்கள் மற்றும் லன்ச்சீட்டுக்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தல் போன்ற பல மாற்றுத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு இருந்தன.

வெகுவிரைவில் மாற்றுத் தீர்வுகளுடன் லன்ச்சீட்டுக்கு பதிலாக வாழையிலை உள்ளிட்ட உள்ளூர் உற்பத்திகளை உணவகங்களில் உணவு விநியோகம் செய்வதற்கும், பொதி செய்யவும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர முதல்வர் அறம் அமைப்பினருக்கு உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *