நான் இருட்டு அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் – நாடாளுமன்றத்தில் முறையிட்ட ரிசாத் பதியூதீன்

குற்ற புலனாய் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீன் இன்றைய அமர்வின் போது கலந்து கொண்டார்.

ரிசாத் பதியூதீன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார். இது நீதிமன்ற விவகாரம் என்று சபாநாயகர் தட்டிக்கழித்தார்.

இதன்போது தனது கருத்தினை தெரிவிக்க ஒரு நிமிடம் அனுமதி தருமாறு ரிசாத் பதியூதீன் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

அதற்கமைய தான் கைது செய்தமைக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். நான் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டது.

தற்போது 102 நாட்கள் ஆகின்றது. இதுவரை எந்த விசாரணைகளும் நடைபெறவில்லை. அமைச்சராக செயற்பட்ட போது அமைச்சின் மேலதிக செயலாளருடன் தொலைபேசியில் உரையாடியதற்காக கைது செய்யப்படுவதாக தெரிவித்தார். இது என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்திற்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம், இது குறித்து கவனம் செலுத்துமாறு ரிசாத் பதியூதீன் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply