மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ராஷி கண்ணா!

<!–

மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ராஷி கண்ணா! – Athavan News

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பொலிவுட் இயக்குனரான ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

இந்த வெப் தொடரில் நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”என்னுடைய பேவரைட் நடிகருடன் மூன்றாவது முறையாக இணைகிறேன். இந்த முறை ஹிந்தியில்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணா ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply