ஓடும் பேருந்தின் டயர் வெடித்து உணவகத்திற்குள் புகுந்த வாகனம்!

விருதுநகரில் டயர் வெடித்ததால் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் புகுந்ததில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர்.

அத்தோடு அருப்புக்கோட்டை அடுத்த பாலவநத்தம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததில் அப்பேருந்து அருகிலிருந்த உணவகத்திற்குள் புகுந்து நின்றது.

மேலும் இதில் பேருந்தில் இருந்த ஒரு பெண் உட்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Advertisement

பேருந்துக்கு அடியில் உணவகத்தின் கேஸ் சிலிண்டர் மாட்டிக்கொண்டதால் தீயணைப்பு வீரர்கள் வந்து அதை வெளியே எடுத்தனர். இதனால் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply