யாழ். வடமராட்சி கிழக்கு – கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான நிகழ்வு இன்றையதினம் (11) நடைபெற்றது.
சென்மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் புனித கப்பலேந்திமாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடாத்தியுள்ளனர்.
அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் இன்று, காலை 10.00 கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகி 02.00 வரை நடைபெற்றது.
உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களது குருதி கொடையை வழங்கியிருந்தனர்.
கட்டைகாடு பகுதியில் முதன் முதலாக இந்த முகாம் தற்பொழுது நடைபெற்று முடிந்ததாகவும் உயிர்காக்கும் உன்னத பணியில் தொடர்ந்தும் கலந்து கொள்வோம் என அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.