கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக, முல்லைத்தீவு இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, 57வது படைப்பிரிவின் தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், 571 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிக்கேடியர் கம்லத் ஆகியோரின் வழிநடத்தலில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பிரதேசத்தில் தனியார் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, குறித்த வீட்டிலிருந்து
கட்டுத்துவக்குகள் 11
இடியன் துவக்குகள் 03
T56 ரக துப்பாக்கி ரவைகள் 250
வாள்கள் 02
கத்தி 01
பட்டாசுகள் 16
பன்றி இறைச்சி 08Kg
உடும்பு தோல் 02
கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் உபகரணங்கள் 02
இடியன் துப்பாக்கி உற்பத்திக்கான பொருட்கள் 08
என்பன மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 31 வயதுடைய வீட்டுரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.