சுற்றுலாத் தளமாக மாறுகிறது கிளிநொச்சி குளம்

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றும் வகையில் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

அப்பகுதியில் நடை பயிற்சிக்கான வலயம், சிறுவர் பூங்கா, நீரில் பயணிக்கும் வகையிலான வசதி, பொழுதுபோக்கு வசதிகள், மின்னொளியூட்டல், வர்த்தக வசதிகள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடத்தி அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டமிடல் ஒன்று குறித்த குளத்தை பார்வையிட வந்த குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த திட்டமிடல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குளத்தினை சூழவுள்ள பகுதி அணை கட்டாக்கப்பட்டு, அதில் நடை பயிற்சிக்கான வசதிகள், இருக்கை வசதிகள் உள்ளடக்கிய முதல் கட்ட பணிகளிற்கு ரூபா 11 கோடி செலவு தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply