காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் தொடர்பாக பைசல் காசிமின் கருத்துக்கு சிறிதரனின் சாட்டை!

காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் தொடர்பாக பைசல் காசிமின் கருத்துக்கு சிறிதரனின் சாட்டை!

காரைதீவு தவிசாளர் தொடர்பாக அநாகரீகமாக கருத்து வெளியிடுவதை கைவிட வேண்டும் என சி.சிறிதரன் எம்.பி இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் தொடர்பாக பைசால் காசிம் எம்.பி இன்று நாடாளுமன்றத்தில் பேதெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சாட்டையடியாக பதிலளித்தார்.

நபிகள் நாயகம் தொடர்பான அவமதிக்கும் முகப்புத்தக பதிவு ஒன்று இருந்ததை காரைதீவு தவிசாளர் பகிர்ந்தார் எனும் குற்றச்சாட்டுக்களையும் எதிர்ப்பையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சில தினங்களாக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர் அத்துடன் முகப்புத்தகங்களில் சில நபர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் பதிவுகளும் கேவலமான வார்த்தை பிரயோகங்களும் வெளிவந்து உள்ளன.

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் அம்பாறை மாவட்ட எம்.பி பைசல் காசிம் ஜெயசிறில் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்தார் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.

நவீன தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைத்தளமொன்றில் வெளிவந்த செய்தியை யார் பதிவிட்டார்இ யார் பகிர்ந்தார் என்ற உண்மைத்தன்மையை ஆராயாது அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் மீது பைசல் ஹாசிம் எம்.பி. ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்த உயரிய சபையில் முன்வைக்கின்றார். இது நாகரீகமற்றது.

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் முஸ்லிம் மக்களுக்காக தமிழ் மக்கள் குரல் கொடுத்திருக்கின்றார்கள் .. நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இனங்களுக்கிடையில் குரோதங்களை வளர்க்கும் வகையில் பேசாது எதையும் ஆராய்ந்து பேச வேண்டும் என்றார்.

[embedded content]

Leave a Reply