நுவரெலியா,டொரிங்டன் தோட்டப்பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
அக்கரைபத்தன, கல்மோதர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த ஐந்தாம் திகதி அக்கரைபத்தன டொரிங்டன் தேயிலை தொழிற்சாலையில் இருந்து மூவர் உழவு இயந்திரத்தில் உரம் ஏற்றி சென்றுள்ளனர்.
பாலத்தைக் கடக்க முற்பட்ட உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்ததில் குறித்த மூவரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த மூவரும் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அக்கரபத்தனை போலீசார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.