காற்றின் தரத்தில் மீண்டும் பின்னடைவு – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காற்று மாசுபாட்டை அளவிடும் காற்றின் தர சுட்டெண் இன்று (12) காலை 10 மணி நிலவரப்படி, கம்பஹாவில் 161 ஆகவும் கண்டியில் 159 ஆகவும் பதிவாகியுள்ளது.

சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வெளியே செல்லும் போது முக்கவசம் அணிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலகுவாக நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *