அண்மையில் அலரி மாளிகையில் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்த ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விருந்தில் குறித்த நபர் வந்து செல்பி எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டார்,என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து அந்த நபர் ஒளிப்படைப்புகள் பேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளார். ஆயினும் கிடைத்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு அந்த நபர் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.