அக்கரைபத்தனை தோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட டொரிங்டன் தோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட டொரிங்டன் ஸ்டார் எல்பெத்த ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் இன்று காலை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 5ம் திகதி டோரிமான் தொழிற்சாலையிலிருந்து கல்மதுரை தோட்டத்திற்கு உரம் மூட்டைகளை ஏற்றி சென்ற உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி விபத்துல்லாகி உள்ளது.
இந்த விபத்தில் உரை மூட்டைகள் சிக்குண்டு விபத்துக்குள்ளான தொழிலாளர்களில் மூவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சங்கு பிள்ளை கந்தையா நேற்று காலை ஆறு முப்பது மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த தொழிலாளிக்கு சவப்பெட்டி செலவு மற்றும் மரண சடங்கு மாத்திரம் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றதாக தெரியவந்துள்ளது.
அதனால் தொழில் நிமித்தம் விபத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த தொழிலாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளருக்கு தோட்ட நிர்வாகம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என இதற்கான நிதி கிடைக்கும் வரை நாம் பணிக்கு செல்ல போவதில்லை என தொழிலாளர்கள் இவ்வாறு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.