கோட்டாவை திட்டிய சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழித்து ,பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு தேவைக்கு ஏற்ப அதனை மீண்டும் உருவாக்குவது ராஜபக்ஷக்களின் கனவுகளில் ஒன்றாக காணப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சாக்கள்  ஆட்சிக்கு வரும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எவரும் திருடவில்லை. ஆட்சியில் இருந்தவர்கள் திருடியமையே நாடு இன்று வங்குரோத்து அடைய மிக முக்கிய காரணம் .

இன்று எமது நாட்டில் சுமார் 33 வீதமானவர்களுக்கு தொழில் இல்லை. பொருளாதாரம் முழுமையாக சரிவடைந்துள்ளது. முதற் தடவையாக இலங்கை வங்குரோத்து அடைந்து விட்டதாக சர்வதேசத்திற்கு அறிவித்தது.

 பயணம் செய்வதற்கு எரிபொருள் இல்லை. உண்பதற்கு உணவில்லை. மின்சாரம் இல்லை. கல்வி செயற்பாடுகள் பூச்சிய மட்டத்திற்கு சென்று விட்டது.

இந்த நாட்டில் அரசியலவாதிகளின் செயற்பாடுகள் முற்றிலும் பிழையானவை. ஆட்சியில் இருந்தவர்கள் திருடியமையே நாடு இன்று வங்குரோத்து அடைய காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *