வடக்கு – கிழக்கில் திடீரென செத்து மடியும் கால்நடைகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காலநிலை காரணமாக இன்று  நண்பகல் 12 மணி நிலவரப்படி உயிரிழந்த கால்நடைகளின்  எண்ணிக்கை 1660 ஆக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மிருகங்களின் மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், விவசாயிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஆராயுமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 மேலும்  வானிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்கு பொருத்தமான வேலைத் திட்டத்தை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் விவசாய அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *