இன்று 1,720 பேருக்கு கொவிட் உறுதி-60 வயதிற்கிற்கு மேற்பட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்..!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 1,720 பேர் இன்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 317,914 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை வியாழக்கிழமை சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாளை காலை 8.30 மணி முதல் பின்வரும் இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைனோபாம் முதலாவது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு, தேசிய வைத்தியசாலை,கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை,ஐ.டி.எச் வைத்தியசாலை,அவிசாவளை வைத்தியசாலை,
விஹாரமஹாதேவி பூங்கா

Leave a Reply