தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தி/கி/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (12) இடம் பெற்றது.

தம்பலகமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த விழிப்புணர்வானது இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாட்டில் இடம் பெற்றதுடன் சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹம்சபாலன் வளவாளராக கலந்து கொண்டார். 

போதைப் பொருள் பாவனை தற்போது அதிகரித்துள்ளதுடன் பாடசாலை மாணவர்களிடையேயும் அதன் பாவனை அதிகரித்துள்ளது இவ்வாறானவற்றை தடுக்கும் முகமாக பல விடயங்கள் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

இறுதியாக இதன் போது மாணவர்களுக்கான சத்திய பிரமாணமும் செய்து கொள்ளப்பட்டது.