2021 க. பொ. த (சா/த)தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (12) திங்கட் கிழமை கால 8.00 மணிக்கு பூவரசந்தீவு அல் மினா மஹா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.


பாடசாலை அதிபர் எம்.வை.எம் ஹதியத்துல்லாஹ் தலைமையின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்வி அதிகாரிகள், சித்தி அடைந்த மாணவர்கள், பெற்றார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.