கோவிட் தீவிரம் : இன்று பகல் முதல் அவசர நிலையை அறிவித்த மற்றுமொரு பிரபல மருத்துவமனை

இலங்கையில் சடுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையும் இன்று பகல் முதல் அவசர நிலையை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்து அடங்கிய கடிதமொன்று வைத்தியசாலையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுகின்ற எண்ணிக்கை சடுதியாக அதிகரித்த காரணத்தினால் இவ்வாறு அவசர நிலையை அறிவிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதேவேளை, இன்று காலை இரத்தினபுரி வைத்தியசாலையும் அவசர நிலைமையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply