உழவு இயந்திரம் குடை சாய்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு இழப்பீடு!

அக்கரபத்தனை,  டொரிங்டன் தொழிற்சாலை பிரிவில் உழவு இயந்திரம் சாய்ந்ததினால், மரணம் அடைந்த தங்கையா என்பவருக்கு தகுந்த நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் உரம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் உர மூட்டைகளுடன் குடை சாய்ந்ததில்,  தங்கையா என்பவர் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை தோட்ட நிர்வாகம் மூடி மறைக்க நினைத்தாலும் அதனை நாங்கள் வெளிப்படுத்தினோம்.

இந்நிலையில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடை வழங்க வேண்டும், எனவும் அதற்கான நடவடிக்கையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜீவன்  மற்றும் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

குறித்த பேச்சுவார்த்தையின் பயனாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய், குடியிருப்பதற்காக ஒரு வீடு, உயிரிழந்த தங்கையாவின் மனைவிக்கு ஒரு நிரந்தர தொழிலும் அவரது பிள்ளைகள் இருவருக்கும் தலா 20 பேர்ச் நிலமும் பெற்றுக் கொடுப்பதாக தோட்டநிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு தொடர்ச்சியாக மலையகத்தில் தொழிலாளர்கள் உயிரிழக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அது மட்டுமல்லாது தோட்ட நிர்வாகமும், கம்பெனியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *