வெளிநாட்டிலிருந்து பொதி வந்துள்ளதாக நிதி மோசடி – முறையிட விசேட இலக்கங்கள்!

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக அனுப்புவதாக உறுதி வழங்கி மற்றும் பல்வேறுப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பொதிகளை பெற்றுக் கொள்வதற்காக சுங்க வரி செலுத்த வேண்டியுள்ளதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளம் ஊடாக போலி தகவல்களை வழங்கி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக உரிய ஆராய்வின்றி எவரினதும் வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடவோ? அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்பவோ? வேண்டாம் என இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு பொதுமக்களை கோரியுள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெறும் தொலைபேசி அழைப்பு மற்றும் குறுந்தகவல் தொடர்பில் 0112 477 125 அல்லது 0112 477 504 என்ற இலக்கங்கள் ஊடாக நிதி புலனாய்வு பிரிவிற்கு அறியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *