2023 பெப்ரவரி பிற்பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல்? வெளியான விசேட அறிவிப்பு

24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளுக்கு 8,327 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இந்த மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என அதன் ஆணையாளர் நாயகம் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த வருடம் டிசம்பர் 26 முதல் 30ஆம் திகதி வரையில் அழைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச் சட்டம் 2017 இன் விதிகளின்படி 2023 பெப்ரவரி பிற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும்.

வேட்புமனு தாக்கல் முடிந்து ஐந்து வாரங்கள் முதல் ஏழு வாரங்கள் வரை உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த காலம் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் இரகசிய முயற்சிகள் பற்றிய ஊகங்களை நிராகரித்த எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதிக்குக் கூட இல்லை என்று கூறினார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் நிறைவுறுத்தப்பட்ட 2022 வாக்காளர் பதிவேடு, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *