பால்மா விலை ஏற்றத்தால் குழந்தைகள், சிறுவர்கள் பரிதவிப்பு- சபா.குகதாஸ் ஆதங்கம்!

பால்மா விலை ஏற்றத்தால் மக்கள் மீண்டும் வரிசைகளில்  காத்திருக்கும் நிலை ஒரு புறமும் அத்தோடு  அதிகரித்த விலையால் பால்மா வாங்க முடியாதா துயர நிலையில் இன்னும் ஒரு தொகுதி மக்களும் பரி தவிக்கும் அவல நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

குழந்தைகளுக்கான பால்மா ரூபா 3500/=ஐ தாண்டியும் சிறுவர்களுக்கான பால்மா ரூபா 1500/=ஐ கடந்தும் விற்பனை செய்யப்படுகின்றது.  தேனீர்ச் சாலைகளில் பால் தேநீர் ரூபா 100/=க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் பால்மா இல்லாமல் மந்த வளர்சியிலும் கல்வி கற்கும் சிறுவர்கள் காலையில் கூட பால் தேநீர்  இல்லாமல் தேயிலைச் சாயத்தை பருகும் பரிதாப நிலையில் உள்ளனர் அத்துடன் முதியவர்கள் நோய்யாளர்கள் மிகவும் வேதனைப் படுகின்றனர்.

ஏற்கனவே மந்த போசாக்கில் பாதிப்புறும் குழந்தைகள் சிறுவர்கள் மேலும் பாதிப்படையும் அபாய நிலை எதிர்காலத்தில் காத்திருக்கின்றது .

பால்மாவின் தொடர்ச்சியான விலை ஏற்றம் காரணமாக  நாட்டின் சாதாரண, மத்தியதர மக்கள் பால்மாவை பயன்படுத்த முடியாத அவல நிலை உருவாகும் . அரசாங்கம் விரைவாக பால்மாவிற்கு  ஓரளவு நிர்ணய விலையை  கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்  என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *