அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்துகொள்ள உகந்த சந்தர்ப்பம் – ரணிலின் பேச்சுவார்த்தை தொடர்பில் ஹக்கீம் கருத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வந்துள்ள அசட்டுத் துணிச்சல் மற்றும் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்துகொள்ள உகந்த சந்தர்ப்பம் இதுவென முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும். பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்

ஏறாவூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளேயிருந்து ஒரு பயங்கரவாதக் கும்பல் உருவாகியது என்று முழு உலகிலும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,இந்த கும்பலைப் பற்றி  மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற முஸ்லிம்கள் யாரும் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ளவுமில்லை ; பெரிதாகக் கண்டு கொள்ளவுமில்லை. அதுதான் உண்மை.

தற்கொலைக் குண்டுதாக்குதல் நடந்த பிறகுதான் இந்த படுமோசமான பாதகச் செயலுக்கு எங்களுடைய முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே இருந்து ஒரு கும்பல் காரணமாக இருந்தது என்று நாங்கள் கண்டுகொண்டோம்.

ஆனால், இப்போதுதான் கொஞ்சம்,கொஞ்சமாக இதனுடைய  பின்னணியில் வேறு வேறு சதித்திட்டங்கள் இருந்தன என்ற  விடயங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

இந்த நாட்டு கிறிஸ்தவ சமூகம் இந்த சம்பவத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதன் ஆன்மீக தலைவர் கார்டினல் மல்கம் ரஞ்சித் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார். இதன் உண்மையை கண்டறிய வேண்டும். அரசியல்வாதிகள் இதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பமுடியாது. என்ற விடயத்தில் மிகக் கவனமாக இருந்து கொண்டு,எந்த நேரமும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெனீவா வரையும் விடயம் சென்றிருக்கிறது. ஜெனீவா தீர்மானத்தில் இந்த அத்துமீறல்களுக்கு காரணமான அரசியல்வாதிகளுடைய ஊழல்கள் சம்பந்தமான ஒரு பொது விசாரணை நடக்கவேண்டும்  என்று சர்வதேச சமூகம் ஒரு பிரேரணையாக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஏனென்றால் இது சும்மா விட்டுவிடும் விவகாரமல்ல, இதற்கிடையில்தான்   இவ்வளவு பெரியதோர் அரசியல் பிரளயம் நடந்து முடிந்தது.

யாருமே எதிர்பார்க்காதவிதத்தில் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இன்று ஜனாதிபதியாகிவிட்டார். 

இந்த நாட்டினுடைய அரசியல் சமன்பாடு பாராளுமன்றத்தில் ஒரு மிகப் பெரிய விசித்திரமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முஸ்லிம்களுடைய அரசியலைக் கையாள்வது என்பது இலேசான காரியமல்ல.  நாங்கள் முகத்தோடு கோபித்துக் கொண்டு மூக்கையறுப்பது மாதிரி அரசியலை செய்ய வெளிக்கிடாமல், மிகக் கவனமாக விடயத்தை கையாளவேண்டிய ஒரு கட்டத்திலிருந்து கொண்டிருக்கிறோம்.

எனவேதான் புதிய சிந்தனையோடு இந்த விடயங்கள் அணுகப்படவேண்டும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து , ‘ அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டின் இனப் பிரச்சினையை நான் தீர்க்கப் போகின்றேன்’  என்று கடும் நம்பிக்கையோடு கதைக்கிறார்.

இந்த நாட்டில் சுதந்திரம் கிடைத்ததிலிருந்தும் ,யுத்தம் தொடங்கியதிலிருந்தும் 30 ஆண்டுகள் முடிந்ததிலிருந்தும் இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கான முயற்சிகளைளைப் பொறுத்தவரை நிறைய நாங்கள்  பின்நோக்கிப் போகலாம். ஆனால்,அதை இந்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கலாம் என்று ஜனாதிபதி அவ்வாறான ஒரு கடும் நம்பிக்கையோடு கதைக்கிறார்.

ஏனென்றால். இந்த கள நிலவரம் அதற்கு சாத்தியமாக இருக்கிறது என்று அவர் நம்புகிறார்.   தெற்கில் இருக்கின்ற சிங்கள பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் இந்த இனப் பிரச்சினையை வைத்துக் கொண்டு இ இந்த உசுப்பேத்தும் பித்தலாட்ட அரசியல் செய்வதற்கான அந்த இடைவெளி இல்லாமல் போய்விட்டது என்பது அவருக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

இதை  தமிழ்,முஸ்லிம்,மலையக கட்சியினர்  எல்லோரும் கொஞ்சம் லாவகமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆனால் பெரும்பான்மை சமூகத்திற்கு மத்தியில் இருக்கிற இந்த பெரும்தேசியவாத கழுகுகளைப் பற்றி இன்னும் சந்தேகம் இல்லாமலில்லை,  அதில் ஒன்று,இரண்டு பாராளுமன்றத்திலேயும் மீண்டும் அந்தக் கூச்சலைப் போடலாமா என்று முயற்சித்து பார்க்கின்றன. ஆனால் அது பெரிதாக எடுபடுவதில்லை. குறிப்பாக இந்த ‘அரகலய ‘என்ற போராட்டம் வந்ததற்குப் பிறகு,  ஜனாதிபதி ‘இனி ஒரு அரகலைக்கு இடம் கொடுக்கமாட்டேன்’ என்கிறார். ஏனென்றால் அவருடைய வீட்டையும் எரித்துப் போட்டார்கள். அவருக்கு  தனிப்பட்ட கோபமும் அதில் இருக்கிறது. அது வேறுகதை.

அப்படிப் போனாலும் ஏதோ ஒரு வகையில் அவரைப் பொறுத்தமட்டில், இன்று தெற்கில் உருவாகி இருக்கிற இந்த புதிய பார்வை காரணமாகஇ பெரும்பான்மை மக்கள் மத்தியில் இப்போது இன ரீதியாக நாங்கள் பிரிந்து  கொண்டு இந்த இழுபறிப்படுகிற வேலையெல்லாம்  சும்மா  அரசியல்வாதிகளுடைய போலியான பித்தலாட்டம். அது அல்ல முக்கியம் என்ற எண்ணப்பாடு தோன்றியிருக்கிறது.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைத்த, இதை லாவகமாகப்  பயன்படுத்திக் கொண்டு நாட்டைச் சூறையாடியவர்கள்தான் இந்த பிரச்சினைக்கும் பொறுப்புதாரிகள் என்ற அளவுக்கு இளைஞர்கள் நம்புகிறார்கள். நிறையப்பேர் இப்படி நம்ப தலைப்பட்டுவிட்டார்கள். ஏனென்றால், இந்த நாட்டின்  ‘பெரும் தேசிய வாதம் ‘ என்ற விடயத்தைத் தூக்கிப்பிடித்த கூட்டம்தான் இந்த நாட்டை மிக மோசமாகச் சூறையாடி இருக்கிறது.

மறுபுறத்தில் அதைவிட ஓரளவு மெத்தனப் போக்கோடு இந்த விடயத்தை கையாண்ட ஏனைய தேசிய கட்சிகளிலும் இந்த சூறையாடலுக்குப் பொறுப்பான கொஞ்சப்பேர் இருக்கலாம். அப்படி இருந்தாலும் ,அண்மைக்காலமாக நடந்த இந்தச் சீரழிவுக்கு  கழுகுப் பார்வையோடு இந்த விடயத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சந்தைப்படுத்தி இ பெரும் தேசியவாத அரசியலின் மூலம் தங்களுடைய அரசியலை பாதுகாத்துக் கொள்வதற்கு போலியான விதத்தில் அதைப் பயன்படுத்தி நாட்டையே சூறையாடிய ஒரு கூட்டம் பற்றி இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் .

இந்த பின்னணியில்தான் இந்த இனப் பிரச்சினைக்கான தீர்வையும் ஏதோ ஒரு வகையில் கொண்டுவந்து இந்த பாராளுமன்றத்திற்குள்ளேயே அதனை சாத்தியமாக்கிக் கொள்ளலாம் என்ற ஓர்அசட்டுத் துணிச்சல் இந்த ஜனாதிபதிக்கு வந்திருக்கின்றமாதிரி தெரிகிறது.

ஆனால் இசாத்தியமாகுமா? இல்லையா?  என்பதற்கு நான் கட்டியம் கூற வரவில்லை ஆனால் தமிழ்,முஸ்லிம் தலைமைகள் இந்த விடயத்தை பக்குவமாகக் கையாண்டால் , நாங்களும் இந்த கொள்கைவாத கோஷங்களை கொஞ்சம் பக்கத்தில் வைத்துவிட்டு யதார்த்த பூர்வமாக யோசித்து,தெற்கில் வசிக்கின்ற சிங்களவர்களும் ஓரளவுக்கு நியாயமானது என்று நம்புகிற அளவுக்கான அதிகபட்ச அதிகாரப் பகிர்வை அடைந்து கொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் இது என்று நான் நம்புகிறேன்.

இதற்கான முயற்சிகள் இந்த பாராளுமன்ற அமர்வு முடிவடைந்ததும்  தொடங்கும் நிலைமை உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சமூகத்திற்கு எதிராக நடந்த அநியாயங்களை மறந்துவிட முடியாது,அவற்றை  நாங்கள் கிடப்பில் போட முடியாது. அவற்றை கேள்விக்குட்படுத்தவேண்டும். ஏனென்றால், சில விடயங்கள்   மிகவும் சந்தேகத்திற்குரியவை. நான் ஏற்கனவே அந்த பயங்கரவாத கும்பலைப் பற்றிச் சொன்னேன். அந்த கும்பலைப் பற்றி இன்று யாரும் பேசுவதில்லை,ஆனால், வழக்குகள் நடக்கின்றன.இந்த நாட்டில் விடுதலைப் புலிகளும் சிங்கள மக்களின் பார்வையில்   பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள். தமிழ் மக்கள் அவர்களின் போராட்டத்தின் இலக்குகளை நியாயப்படுத்தினாலும்இ அதை அடைவதற்கான வன்முறை என்பது மிக மோசமாக விமர்சிக்கப்படுகிறது.

அவ்வாறே, சிங்கள மக்கள் மத்தியிலும் வன்முறை மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இளைஞர்கள் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் நடந்தது. இரு சாராரரும் , அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நினைவை இன்னும்  கொண்டாடுகிறார்கள்.

 அதற்கென்று ஒரு தினத்தை ஒதுக்கிஇ அந்த தினத்தின் போது அவர்களை நினைவுகூர்கின்றார்கள். ஜேவீபி யினர் ‘மகா விருதின ‘ என்று ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள். பிரபாகரனுடைய பிறந்த நாளில் நிறையப் பேர் வடகிழக்கில் அந்த போராட்டத்தின் நினைவாக தீபம் ஏற்றுகிறார்கள். ஆனால் இமுஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் நடந்த வன்முறைமாத்திரம் முஸ்லிம் சமூகத்தினால் நினைவுகூரப்படுவதுமில்லைஇ படவேண்டியதுமில்லை. நாங்கள் நினைவு கூர்வதை விட்டுவிட்டு, அந்த படுபாதக செயலைச் செய்தவர்களுடைய ஜனாஸாக்களைக் கூட பொறுப்பெடுக்கவில்லை. அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்லர் என்று நாங்கள் ஒதுக்கிவிட்டோம். இதுதான் வித்தியாசம். அவர்களுக்குப் பின்னால் ஒரு கொள்கையுமில்லை.அதுமுஸ்லிம் சமூகத்திற்கான ஒரு போராட்டமுமல்ல .

ஆனால் அதற்குப் பின்னால் வேறு சக்திகள் இருந்தன என்பது தான் உண்மை. அந்த சக்திகள் கண்டறியப்படவேண்டும்.அவற்றை மூடிமறைக்க விட இயலாது. அதற்கு பின்னால்இஇந்த நாட்டின் பெரும் தேசியவாத கழுகுக் கூட்டம் இருந்ததா? என்பது சம்பந்தமான ஒரு பெரிய கேள்வி இருக்கிறது. ஏனென்றால், சமாந்தரமாக நடந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது அப்படிதான் தோன்றுகிறது.

சில விடயங்களை சுட்டிக் காட்டினால் உங்களுக்கு விளங்கும்.வவுணதீவில் பொலிசார் இருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். 2018 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி  அது நடந்தது.

அப்போது ஆட்சியில் இருந்தது யாரென்று பாருங்கள். அவை எல்லாம் நடந்தது 52 நாள் ஆட்சி காலத்தில்தான் .அதற்குப் பிறகு டிசம்பர் 20 அல்லது 24 என நினைக்கிறேன் அந்த நாளில் அந்த 52 நாள் ஆட்சி முடிவுக்கு வருகிறது மறுபடியும்,ரணில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகுதான் இந்த சஹ்ரானுடைய கும்பலுடைய வேலைகளெல்லாம்  தீவிரப்படுத்தப்படுகின்றன.  ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு உளவுத்துறை,இலங்கையின் உளவுத் துறைக்கு அறிக்கை ஒன்றை விடுக்கிறது.

பெயர் குறிப்பிட்டு சஹ்ரானுடைய கும்பலுடைய ஆட்களின் பெயர்களைப் போட்டு இவர்கள் இப்படியான தாக்குதல் ஒன்றுக்கு தயாராகிறார்கள்  என்பதுவே அந்த அறிக்கை.ஏப்ரல் 5 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுடைய வரவுஇசெலவு திட்டம் ஐந்து வாக்குகளால் நிறைவேறுகின்றது. ஏப்ரல் 9 ஆம் திகதி சுதந்திரக் கட்சியும்  மொட்டுக் கட்சியும்  ஒரு பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது. மீண்டும்கூடுவோம் எனக் கலைகிறார்கள்.  ஏப்ரல் 21 ஆம் திகதி அந்த பயங்கர குண்டு வெடிப்புகள்  நடக்கின்றன.எல்லாம் திட்டமிட்டமாதிரி ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலோடு இந்த பயங்கரவாத நிகழ்ச்சி நிரலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏதோ ஒரு காரணத்திற்காக  கத்தோலிக்க சமூகம், முஸ்லிம் சமூகம் இரண்டையும் மோத வைக்க முயற்சிக்கப் படுகின்றது. ஆட்சியை இழந்தவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்,அதுதான் உண்மை. அதனோடு சம்பந்தப்பட்ட இன்னும் பல விடயங்களை நான் இங்கு பட்டியல் போடலாம் .அதற்கு நேரம் காணாது.

இப்பொழுது  நான் மிக நுணுக்கமாக அவற்றையெல்லாம் ஆராய்து வருகின்றேன். ஏனென்றால் இவற்றையெல்லாம் சவாலாக நாங்கள்  எடுக்க வேண்டும். எப்படியெல்லாம் இந்த கும்பல் கையாளப்பட்டது?ஏனென்றால்,   இன்னும் கூட இந்த முஸ்லிம் சமூகத்திற்கு அது புரியாத புதிராக இருக்கிறது. இன்றைக்கும் அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்  அதற்குப் பின்னால் இருந்து வழிநடாத்திய இன்னுமொரு மறை சக்தி அதாவது மறை கரம்  இருந்தது. 

வவுணதீவு சம்பவத்தில் ஷானி அபேசேகர என்ற மிகவும் சிறந்த உளவுத்துறை அதிகாரியுடைய குழு போய் சம்பந்தப்பட்ட ஒருவரைக் கைது செய்கிறார்கள். உடனே ராணுவ உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் வந்து ‘இவர் எங்கள் ஆள் ‘என்று அவரை விடுவித்துக் கொண்டு போகின்றார்கள்.  உளவுத்துறை  மூத்த அதிகாரியொருவர் அவருடைய தொலைபேசியிலுள்ள தரவுகள் எல்லாற்றையும் அழித்து விடுகின்றார்.  தரவுகளை அழித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பினர். இப்பொழுது அவர் அரச சாட்சி. ஆனால்,அவர் தன்னுடைய தொலைபேசியிலுள்ள தரவுகளை பகிரங்கமாக அழித்தவர், அதைப்பற்றிக் கதை  கிடையாது.ஏன் தொலைபேசியிலுள்ள தரவுகளை அழித்தார் என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை.

இதைவிடவும் ஒரு சில விடயங்களை அன்று பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியை வைத்துக் கொண்டு சொன்னேன்.

ஏனென்றால் எங்களுக்கு நடந்த அநியாயத்தை வைத்துக் கொண்டு அவர்கள்  நடத்திய பித்தலாட்டம் சாமான்யமானதல்ல. ஏனென்றால், முஸ்லிம்கள் மீது இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தின் வெறுப்புணர்ச்சியை தூண்டுவதற்காக அவ்வாறு செய்தனர்.அவ்வாறாகஆட்சி அதிகாரத்தை அடைந்த பிறகும் எங்களைப் போட்டு படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

கொவிட் தொற்றினால் மரணித்தவர்களைப் போட்டு  எரித்து எங்களுடைய  ஜனாஸாக்களுக்குச் செய்த அநியாயம் சாதாரணமானதல்ல.அவ்வாறாக  அவர்களுடைய இந்த வெறுப்புணர்ச்சிக்கு ஒரு எல்லையில்லாமல் போனது. ஆனால் இவ்வளவுக்கும் பின்னால் இருந்த மறைகரம் என்ன? அது கண்டறியப்படவேண்டும். ஏனென்றால் இன்றைக்கு தமிழ் சமூகம் முள்ளிவாய்க்கால் சம்பவத்தைப்பற்றி இன்னும் அது விசாரிக்கப்படவேண்டும். சரணடைந்தவர்களுடைய உயிர்களுக்கு என்ன நடந்தது?  என்ற கேள்வியை சர்வதேச சமூகத்திற்கு முன்னால் வைத்திருக்கிறார்கள்.  எங்களுடைய சமூகத்தின் அப்பாவிகள் நிறையப்பேரைக் கொண்டுபோய் இல்லாத பொல்லாத விடயங்களைச் சொல்லி அடைத்து வைத்திருக்கிறார்கள்.  போதாக் குறைக்கு ஜனாஸாக்களையும் கொண்டுபோய் எரித்துப் படுத்திய பாடு, இதற்கு என்ன நஷ்டஈடு அரசாங்கம் தரப்போகிறது.

இதை சும்மா விட இயலாது இநாங்கள் இந்த தற்கொலைக் குண்டுதாரிகள் யாருக்காகவும் எந்த தீபமும் ஏற்றவில்லைஇ ஒருவரும் கத்தம் ஓதப்போகவுமில்லை, நாங்க அந்த ஜனாஸாக்களைக்கூட பொறுப்பெடுக்கமுடியாது என்று புறத்தொதுக்கியதற்கான காரணத்தினால் எங்களுக்கு அதில் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை முழுமையாக நிருபித்திருக்கிறது. ஆனால் இன்னும்  எங்களுக்கு மேல் இதை ஒரு பலியாகச் சுமத்தி, ஏதோ முஸ்லிம்களுக்குள்ளே தீவிரவாதம் ஊடுருவியிருக்கிறது என்று நிருபிக்கத்தான் முயற்சிக்கிறார்கள்,எல்லா விடயங்களிலும் மூக்கு நுழைக்க வருகிறார்கள் என தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிக்கு  25 பேருக்கு எதிரான வழக்கை ஒத்திவைத்தியிருக்கிறார்கள் .இரண்டு  அரச  சாட்சிகளைக் கொண்டுவரப் போகிறார்களாம். 

பொறுத்திருந்து பார்ப்போம் .நீதி மன்றத்திலிருக்கிற வழக்கு என்றபடியாக நான் எதுவும் பேச வரவில்லை.அதில் ஒரு சாட்சி தொலை பேசியிலிருந்த தரவுகளை அழித்த ஆள். என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்கப்போகிறேன்.  எப்படி அரச சட்டவாதி அந்த சாட்சியத்தை வழிநடாத்தப் போகின்றார் ?அதுமட்டுமல்ல. இன்னுமொருவர் வந்திருக்கிறார். வெளிநாட்டிலிருந்து வந்த அவர் ஒரு பெரிய பயங்கரவாத நிபுணர். அவரும் எவற்றைச்சொல்லப் போகிறார் என்று பார்க்கத்தான் போகிறோம். ஏனென்றால் முஸ்லிம்களை பகடைக்காய்களாக வைத்து தேவையில்லாத ஒரு விபரீத காரியத்தைச்  செய்த மறைகரம் சக்தி என்ன? என்பது கண்டறியப்பட்டே ஆகவேண்டும் அதற்கான நியாயம் , நீதி எங்களுக்கு கிடைத்தே ஆகவேண்டும். இதை நாங்கள் சும்மாவிட இயலாது. இந்த சம்பவங்கள் மற்றும் இவற்றிக்குப் பின்னால் இருக்கின்ற  மர்மங்கள் மிகத் தெளிவாகக் கண்டறியப்படவேண்டும்.

பலரும் இது சம்பந்தமாக  பேசத் தொடங்கிவிட்டார்கள். எல்லோருமாகச் சேர்ந்து இதன் உண்மையைக் கண்டறியவேண்டும்.  தமிழர்களுக்கும்இ

முஸ்லிம்களுக்கும் அநியாயங்கள் நடந்திருக்கின்றன. அதற்குத்தான் உண்மை கண்டறிப்படுவதற்கான புதிய ஆணைக்குழு  ஒன்று அமைக்கப்படப்போகிறது.  ஏதாவதொரு  பொறிமுறையூடாக இதற்கு ஒரு முடிவு காணப்பட வேண்டும்.

Leave a Reply