நான் சொல்வதைக் நீங்கள் கேளுங்கள் – பஸிலை திட்டிய ரணில்

அமைச்சரவை மாற்றத்தை இந்த வாரம் மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இம்மாதம் 8ஆம் திகதி நிறைவடைந்துள்ளது. ‘மொட்டு’க் கட்சியின் பேராதரவுடன் ரணிலின் வரவு – செலவுத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், புதிய அமைச்சரவையை இந்த வாரம் நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் பஸில் ராஜபக்ச கேட்டுள்ளார்.

ஆனால், அதற்கான தேவை இப்போது எழவில்லை என்றும், ஜனவரியில்தான் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்றும் பஸிலிடம் ஜனாதிபதி கூறினார் என்று அறியமுடிகின்றது.

Leave a Reply