சங்கானை கலாசார மத்திய நிலையத்திலும் கண்வைத்த தொல்லியல் திணைக்களம்?

சங்கானை கலாசார மத்திய நிலையத்தை சுவீகரிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் தீவிர முயற்சி எடுத்துள்ள நிலையில் இதற்கு வலி.மேற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கலாசார மத்திய நிலையத்தின் கட்டிடம் அரச காணியில் அமைந்திருக்கின்ற போதிலும் அதன் முன் வளாகம் பிரதேச சபைக்கு சொந்தமானதாகும்.

இதனால் குறித்த நிலையத்தை தொல்லியல் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு இடமளிக்க முடியாது என பிரதேச சபை தெரிவித்துள்ளது.

மேற்படி நிலையத்தை சுவீகரிப்பது  தொடர்பான கூட்டம் ஒன்று நாளை {13} வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதேவேளை, தமிழர் பிரதேசத்தில் உள்ள பல இடங்களையும் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள நிலையில் கலாசார மத்திய நிலையங்களையும் சுவிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையானது தமிழ் மக்களை கவலையடையச் செய்துள்ளது.

இத தமிழர் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான முயற்சி எனவும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply