உறவினரின் இறுதிச் சடங்கிற்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம், தனது நெருங்கிய உறவினரொருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சிறை அதிகாரிகளால் அவர் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Advertisement

குறித்த இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply