காசல்றி நீர்த்தேக்கத்திலிருந்து பெண் சடலம் மீட்பு!!

காணாமல் போயிருந்த பெண்ணொருவர், காசல்றி நீர்த்தேக்க பகுதியிலிருந்து நேற்று  (13) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா- காபெக்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆறுமுகம் கமலம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்த்தேக்கத்திலிருந்து 300 மீற்றர் தொலைவிலேயே பெண்ணின் வீடு காணப்படுவதாகவும், 12ம் திகதி இரவிலிருந்து  இப்பெண் காணாமல் போயிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன பெண் உறவினர்களால் தேடப்பட்ட போது, நேற்று  காலை 7.30 மணியளவில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply