கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (12) முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் ரயில் நிலையத்துக்கு அண்மையில், பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதி உள்ளது.
இதில் முச்சக்கர வண்டி சேதமடைந்ததுடன், இதன்போது சாரதி பாய்ந்து உயிர்தப்பியுள்ளார்.
