கிறிஸ்மஸ் தினத்தில் சுற்றுலா சபையின் அங்கீகாரம் பெற்ற விடுதிகளுக்கு ,மதுபான விநியோகத்தை மேற்கொள்ளும் அனுமதியை வழங்கவேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சு, நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபான விற்பனையை தடைசெய்வதற்கு பதிலாக விநியோக அனுமதியை வழங்குமாறு தமது அமைச்சு நிதியமைச்சிடம் கோரியுள்ளது.
இந்தநிலையில் நிதியமைச்சு அனுமதி வழங்குமானால், தமது திணைக்களம், கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபான விநியோகத்துக்கான அனுமதியை வழங்கும் என்று மதுவரித் திணைக்கள ஆணையாளர் எம்ஜே குணசிறி தெரிவித்துள்ளார்