தமிழ் – முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெறுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், இன்று ஞாயிறு காலை 11.00 மணிக்கு கொழும்பில் ரெலோவின் ஒருங்கமைப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு. அதுவே எமது அரசியல் இலக்கு. அதில் ஒருபோதும் விட்டுக் கொடுப்புக்கு இடம் இல்லை.
ஆனால் ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ள 13A முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த அதன் காரணகர்த்தாவான இந்தியாவிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற கருத்தோடு இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 02ம் திகதி திண்ணையில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

