மொழி தெரிந்திருந்தால் முப்பது ஆண்டுகால யுத்தம் இடம்பெற்றிருக்காது! யாழில் அத்துரலிய தேரர் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கு சிங்களமும், சிங்கள மக்களுக்கு தமிழும் தெரிந்திருந்தால் 30 வருடகாலமாக இடமாற்ற யுத்தம் இடம்பெற்றிருக்காது என நினைக்கிறேன் என இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்தினதேரர் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையின் வடமாகாண தலையக் காரியாலயத்தில் இடம்பெற்ற இரண்டாம் மொழிக் கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து பெளத்த கலாச்சாரப் பேரவையூடாக சுமார் 15ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சிங்கள மொழியை கற்று வெளியேறியுள்ள நிலையில் தொடர்ந்து நாம் மேற்கொள்வோம்.

நாட்டில் தற்போது இடம்பெற்று ஆட்சி சரியானதா என்று கேள்வி க்கு மத்தியில் பிரச்சினைகளை கூறுவதிலும் பார்க்க நாட்டில் உள்ள காணிகளை நாட்டு மக்களுக்கு வழங்குவதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

நாட்டில் முதுகெலும்பான விவசாயத்துறையை ஊக்குவிக்க, மக்களுக்கு காணிகளை வழங்க வேண்டும்.

காஸ் அடுப்புகள் வெடிக்கிறது ஏன் ஒவ்வொருவரும் இயற்கை வாயுவை உற்பத்தி செய்ய முடியாது? வீட்டுக்கு ஒரு பசுவை வளர்த்தால் தொழில் முயற்சிமை மோம்படுத்துவதோடு இயற்கை வாயுவையும் உற்பத்தி செய்யலாம்.

ஆகவே நாட்டை வழிநடத்துபர்களுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கிறது ஆகயால் மக்கள் சிறந்த முறையில் வாழ்வதற்கு வழி அமைப்பார்கள் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *