நுவரெலியா – நோட்டன் – பம்பரகலை தோட்டத்தில், இன்று (12) அதிகாலை உள்ளக வீதியோரத்தில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சாரதி உட்பட்ட நால்வர் குறித்த ஓட்டோவில் பயணித்துள்ள நிலையில் சாரதியும் மற்றுமொருவருமே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.