யாழ்ப்பாணம் மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில், மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் தூண்டிலில் வெடிகுண்டு இருந்த பையொன்று சிக்கியுள்ளது.
உடனே குறித்த சிறுவர்கள் அதனை தூக்கி பார்த்தபோது, அப் பையில் துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
யாழ். பொலிஸார் குறித்த வெடிகுண்டினை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, விசேட அதிரடிப் படையின் உதவியுடன் மீட்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.